மலையிலும், நதியிலும் கரைபுரண்டது வெள்ளம் அந்நாளில். ஓடையிலும், ஏரியிலும் நிறைந்தது தண்ணீர் பொன்னாளில். நிலத்தடி இருந்த நீரை இறைத்தோம் குடிப்பதற்காக பின்னாளில், குடிக்க நீருக்கு நடையாய் நடக்கிறோம் இந்நாளில். பரவையில் வாரி இறைத்த காலம், வாளியில் அள்ளிக் கொட்டிய காலம், குவளையில் கொப்பளித்த காலம் தாண்டி, அகப்பையில் அளந்து குடிக்கும் நேரமிது. நிதானிப்போம், எதிர்கால சந்ததியைக் காப்போம், நீர்வளம் பேணுவோம், நீரை சேமிப்போம். சொட்டுவது வெறும் தண்ணீரல்ல, அது எதிர்காலத்தின் உயிர். Vaidyanathan Deshika (19-E2)
Eunoia Junior College Student Showcase Site
From TLL
தூய்மைக்கேடு
நீல நிற அலைகள் அன்று என் தங்க மேனியை முத்தமிட்டுச் சென்றன மென்மையான தென்றல் காற்று என் பசுமையான கூந்தலை மெல்ல உரசியது என் மழலைச் செல்வங்களுடன் என்னைப் பகிர்ந்து கொண்டேன் ஆனால் அவர்களின் சுயநலம் மேலோங்கியது என் உலகம் இருண்டது கருநிற அலைகள் இன்று என் உருவற்ற மேனியை விட்டுச் செல்கின்றன சுவாசக் காற்று என் உயிரற்ற உடலிலிருந்து நிரந்தரமாகப் பிரிகிறது என் கண்களிலிருந்து வழியும் நீர்துளிகள் கரைக்குமா மானிடா உன் மனதை? Sahana Devi…
பயணம்
‘மறந்துவிடாதே அடுத்த வாரம் நம்முடைய தொடக்கக் கல்லூரியுடைய பதினைந்தாவது பிறந்தநாள். நம் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் வருவாங்க. நீயும் கண்டிப்பாக வர வேண்டும்! உனக்காக காத்திருப்பேன். மறந்திடாதே!’ நாட்கள் பல ஓடிவிட்டன. ஆனால் ஆட்கள் மட்டும் மாறுவதே இல்லை. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. இந்த இருபத்தி ஐந்து வயது நிவேதாவின் நிலையைப் பதினெட்டு வயது நிவேதா பார்த்தால் என்ன நினைப்பாள்? சிரிப்பாளா? அழுவாளா? இல்லை திருப்தி அடைவாளா? என் நண்பர்கள் என்னை இப்பொழுது பார்த்தால் என்ன…
குடி நீர்
மலையிலும், நதியிலும் கரைபுரண்டது வெள்ளம் அந்நாளில். ஓடையிலும், ஏரியிலும் நிறைந்தது தண்ணீர் பொன்னாளில். நிலத்தடி இருந்த நீரை இறைத்தோம் குடிப்பதற்காக பின்னாளில், குடிக்க நீருக்கு நடையாய் நடக்கிறோம் இந்நாளில். பரவையில் வாரி இறைத்த காலம், வாளியில் அள்ளிக் கொட்டிய காலம், குவளையில் கொப்பளித்த காலம் தாண்டி, அகப்பையில் அளந்து குடிக்கும் நேரமிது. நிதானிப்போம், எதிர்கால சந்ததியைக் காப்போம், நீர்வளம் பேணுவோம், நீரை சேமிப்போம். சொட்டுவது வெறும் தண்ணீரல்ல, அது எதிர்காலத்தின் உயிர். Vaidyanathan Deshika (19-E2)
சுனாமி
கடலே! உன்னைப் பற்றி எழுதாத கவிஞரும் இல்லை, உன்னைப் புகழாத புலவரும் இல்லை, உன்னை வணங்காத மீனவரும் இல்லை! அப்படி இருக்க, நீ மட்டும் ஏன் சீற்றம் கொண்டு எங்களை விழுங்குகிறாய்? ஓ! உன் அன்பான அலைகளால் எங்களை அரவணைக்கிறாயோ! Bharathidasan Mometha (19-I3)
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு
‘’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை’’ என்று அன்றே வள்ளுவர் உரைத்தார். பழங்காலத்தில் ஆதிமனிதன் பாமரராய் விலங்கோடு விலங்காகக் குகைகளிலும் பாறை அடிகளிலும் வாழ்ந்து வந்தான். இன்றோ மின்சாரம், தொழில்நுட்பம் என்று நாகரீகம் பெற்று நவீன வாழ்வை வாழ்கிறான். இதற்கு அடிப்படைக் காரணம் கல்விதான் என்று திண்ணமாகக் கூறலாம். செல்வத்துள் செல்வம் மனிதன் கல்வியறிவு பெற்று விளங்குவதே ஆகும். எனினும், கல்வி கற்பதைத் தங்குதடையற்ற ஒரு பாதை என்று கூறினால் அது முழுப் பூசணிக்காயைச் சோற்றில்…
இயற்கை
மெல்லிய காற்றில் அசையும் மரகத இதழ்கள் துளி துளியாய் விழும் முத்து பரல்கள் கருமேகங்களைத் துரத்தும் வண்ண நிறங்கள் இயற்கை தரும் அபூர்வ பரிசுகள்! Pandiarajan Sumathy Sujitha (18-I3)