தூய்மைக்கேடு

நீல நிற அலைகள் அன்று
என் தங்க மேனியை முத்தமிட்டுச் சென்றன
மென்மையான தென்றல் காற்று
என் பசுமையான கூந்தலை மெல்ல உரசியது
என் மழலைச் செல்வங்களுடன் என்னைப் பகிர்ந்து கொண்டேன்
ஆனால் அவர்களின் சுயநலம் மேலோங்கியது
என் உலகம் இருண்டது
கருநிற அலைகள் இன்று
என் உருவற்ற மேனியை விட்டுச் செல்கின்றன
சுவாசக் காற்று என் உயிரற்ற உடலிலிருந்து நிரந்தரமாகப் பிரிகிறது
என் கண்களிலிருந்து வழியும் நீர்துளிகள் கரைக்குமா மானிடா
உன் மனதை?

Sahana Devi d/o Shanmuganathan (19-A1)