குடி நீர்

மலையிலும், நதியிலும் கரைபுரண்டது வெள்ளம் அந்நாளில்.
ஓடையிலும், ஏரியிலும் நிறைந்தது தண்ணீர் பொன்னாளில்.
நிலத்தடி இருந்த நீரை இறைத்தோம் குடிப்பதற்காக பின்னாளில்,
குடிக்க நீருக்கு நடையாய் நடக்கிறோம் இந்நாளில்.

பரவையில் வாரி இறைத்த காலம்,
வாளியில் அள்ளிக் கொட்டிய காலம்,
குவளையில் கொப்பளித்த காலம் தாண்டி,
அகப்பையில் அளந்து குடிக்கும் நேரமிது.

நிதானிப்போம், எதிர்கால சந்ததியைக் காப்போம்,
நீர்வளம் பேணுவோம், நீரை சேமிப்போம்.
சொட்டுவது வெறும் தண்ணீரல்ல,
அது எதிர்காலத்தின் உயிர்.

Vaidyanathan Deshika (19-E2)